ஸ்கொட்லாந்தில் சிறுவர்களுக்கு உடல்ரீதியான தண்டனைகளை வழங்குதல் மற்றும் கட்டாயப்படுத்துதல் தடை

ஸ்கொட்லாந்தில் சிறுவர்களுக்கு உடல்ரீதியான தண்டனைகளை வழங்குதல் மற்றும் கட்டாயப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், சிறுவர்களுக்கான குறித்த சட்டத்தினை அமுல்படுத்தும் பிரித்தானியாவின் முதல் நாடாக ஸ்கொட்லாந்து பதிவாகியுள்ளது.குறித்த சட்டத்தின் மூலம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை அவர்களது பெற்றோர்களோ அல்லது சிறுவர் பராமரிப்பு மையங்களோ, உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மூலம் தமது பணிகளை செய்வதற்கு வற்புறுத்த முடியாது.

குறித்த சட்டமானது முதன் முதலாக 1979ம் ஆண்டு சுவீடனில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் சர்வதேச ரீதியாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் 58வது நாடாக ஸ்கொட்லாந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.