ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியர் அட்மிரல் D.K.P.தசநாயக்கவினால் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய
சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் ஷானி அபேசேகர இன்று ஆணைக்குழுவில் ஆஜரானார் என தெரியவருகிறது.