ஷங்கருக்காக இளையராஜா போட்ட ட்யூன்கள்… அனைத்தையும் ரிஜக்ட் செய்த பின்னணி!

AR Rahman on his love of music - Friday Magazine

இயக்குனர் ஷங்கர் தன் முதல் படமான ஜெண்டில்மேனுக்கு இளையராஜாவைதான் இசையமைக்க முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.

90களில் ரஹ்மானின் வரவுக்குப் பின்னர் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. ரஹ்மானை மிகவும் சிறப்பாக பயன்படுத்திய இரு இயக்குனர்கள் என்றால் அது மணிரத்னமும், ஷங்கரும்தான். ஷங்கரின் முதல் படமான ஜெண்டில்மேனில் இருந்து எல்லாப் படங்களுக்கும் ரஹ்மா இசை (அந்நியன், நண்பன், இந்தியன் 2 தவிர்த்து).

இந்நிலையில் தன் முதல் படமான ஜெண்டில் மேனுக்கு ஷங்கர் இளையராஜாவைதான் இசையமைப்பாளராக போட்டிருந்தாராம். ஆனால் ஏனோ சில காரணங்களால் இளையராஜா அவரை சரியாக நடத்தாததாலும், மோசமான ட்யூன்களைப் போட்டுக் கொடுத்ததாலும் ரஹ்மானிடம் சென்றுள்ளார் ஷங்கர். இதன் பிறகு ஷங்கரும் இளையராஜா பக்கம் செல்லவே இல்லை.