வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த அறுவை சிகிச்சைக்காக அவர் மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.