வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு!

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டத்தை தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.