வேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசின் முடிவிற்கு திருமாவளவன் வரவேற்பு!

மனுநூல் குறித்து சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து அங்குள்ள மாத்தம்மா கோயிலில் வழிபட்ட அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் எனக்கூறிய அவர், ஆளுநர் முடிவெடுக்கும் வரை நீண்ட கால பரோலில் 7 பேரையும் விடலாம் எனவும் யோசனை தெரிவித்தார். வேல் யாத்திரைக்கு தடைவிதித்த தமிழக அரசின்  துணிச்சலான முடிவை வரவேற்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.