வெள்ளிக்கிழமை முதல் ஒண்டாரியோவில் Lockdown வருமா ??

ஒண்டாரியோ மாகாணத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய covid -19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அமுலுக்கு வர இருக்கின்றன,ஒண்டாரியோ மாகாணம் ஒரு முழுமையான ஒரு முடக்கநிலைமைக்கு செல்லவேண்டிய ஒரு கட்டாய நிலைமையில் இருப்பதாக ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்தார்   இன்று வியாழக்கிழமை தனது அமைச்சரவையுடன் கலந்து ஆலோசித்த பின்பு ஒண்டாரியோ மாகாணத்தை முழுமையாக முடக்கும் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்    

இந்த சந்திப்பில் COVID-19 வேகமாக பரவும் பகுதிகளில் எந்தவகையான கட்டுப்பாடுகளை விதிப்பது,அதிகரிக்கும் காவிட-19 பரவலை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற விடயங்கள் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிய வருகின்றது
கடந்த சில நாட்களாக பீல் மற்றும் டொரோண்டோ பிராந்தியங்களில் மிகவும் அதிகூடிய covid -19 தொற்று பரவல் எண்ணிக்கையானது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக இருக்கின்றது எனவும் கடந்த வாரம் தான் பிரதம மருத்துவ அதிகாரியுடன் தொடர்புகொண்டு இந்த covid -௧௯ இரண்டாவது அலையின் தொற்று பரவலை சமப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என தனக்கு அறிவிக்குமாறு கேட்டதாகவும் Doug Ford தெரிவித்தார்