வெளி அச்சுறுத்தல்களுக்கு பெலரஸும் ரஷ்யாவும் இணைந்து பதிலளிக்கும் – லுகாஷென்கோ

சர்வதேச சக்திகளின் அச்சுறுத்தலுக்கு கூட்டாக பதிலளிக்க பெலரஸும் ரஷ்யாவும் தயாராக இருப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி மூலமான கலந்துரையாடலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.ஓகஸ்ட் 9 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவரது 26 ஆண்டு ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியது.இந்த சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து பாதுகாக்க நட்பு நாடான ரஷ்யாவுடன் லுகாஷென்கோ நெருக்கத்தை பேணினார்.

மின்ஸ்க் மற்றும் நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து பெலரஸ் அதிகாரிகள் மீது வொஷிங்டன் பொருளாதாரத் தடைகளை விதித்தது.இந்நிலையில் பெலரஸின் உள் விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது. அதே நேரத்தில், வளர்ந்து வரும் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு நாடுகள் கூட்டாக பதிலளிக்க தயாராக உள்ளன என ரஷ்யாவின் இன்டர்பொக்ஸ் செய்தி நிறுவனம் பெலரஸ் அரச தொலைக்காட்சியை மேற்கோளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.