வெளிநாடுகளில் சிக்கியிருந்த 31 இலங்கையர்கள் கொரோனா அச்சுறுத்தலால் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

நேற்று (12 ) இரவு 10.30 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்த 20 இலங்கையர்கள் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே -648 விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோன்று இன்று காலை 3.50 மணியளவில், ஜப்பான் நரிட்டோவிலிருந்து 16 இலங்கையர்கள், இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -455 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.