வூஹான் நகரில், மழலையர் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வூஹான் நகரில் முழுமையாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து கல்லூரிகள், உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மாணவ, மாணவியர், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படாததால், முகக்கவசம் அணியாமல் மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். 

முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.