வீதியில் விழுந்து கிடந்த முதியவரை வைத்தியசாலையில் சேர்த்த இளைஞர்கள்

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் நேற்றையதினம் இரவு அங்கவீனமுற்ற முதியவர் ஒருவர் தலைப்பகுதியில் காயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளார்.
இதனை அவதானித்த இளைஞர்கள் சிலர் உடனடியாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற அம்புலன்ஸ் வாகனம் முதியவரை ஏற்றிச்சென்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது.