வீட்டில் இருந்து தான் இவ்வருடம் தீபாவளியைக் கொண்டாட முடியும்

கொவிட்19 காரணமாக இவ்வருடம் தீபாவளியை வீட்டில் இருந்து தான் கொண்டாட வேண்டும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

சென்றகாலங்களை போல் இல்லாது இந்த வருடம் கொவிட் தொற்று நிலவுவதால், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அறிவுரைகளின் பிரகாரம் இந்நிகழ்வை நடாத்த தீர்மானித்துள்ளோம்.  ஒருலட்சத்தி ஐம்பதாதிரத்திற்கு மேற்பட்ட இந்துக்கள் வவுனியா மாவட்டத்தில் இருக்கின்றார்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இருந்த போதும் சுகாதார திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கு அமைய கோவில்களில் கூட்டம் கூடாமல், பூஜை வழிபாடுகளில் முடிந்த வரை குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்குபற்றும் படியும், இயன்றளவு கோவில்களுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தே வழிபாடுகளையும் ஏனைய சமய அனுஷ்டானங்களையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுகொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.