வீட்டிலேயே சிம்பிளாக மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நகுல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ ‘மாசிலாமணி’ உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில் நடிகர் நகுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரது ஆசீர்வாதங்களை பெற்றார்.

அதையடுத்து தனது செல்ல மகளுக்கு அகிரா ஸ்ருதி பேட்டர்பெட் (Akira Sruti Betarbet) என்று பெயர் வைத்தனர். இதில் பேட்டர்பெட் என்பது அவரது குடும்ப பெயர். இந்நிலையில் தற்போது மகள் பிறந்து 100 நாட்கள் ஆவதை தொடர்ந்து அவளுக்கு பெயர் சூட்டு விழாவை வீட்டிலேயே சிம்பிளாக நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்றுள்ளார். இருந்தும் மகளின் முகத்தை கட்டாததால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர் .

https://www.instagram.com/p/CHaWIA4lnQr/?utm_source=ig_web_button_share_sheet