விஷால் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டான் – மீரா மிதுன் புதிய ஆடியோ!

This action hero is Meera Mitun's true genuine friend in Kollywood! - Tamil  News - IndiaGlitz.com

அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர்.

இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன்
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீரா மிதுனின் எக்ஸ் மேனஜரான வெங்கட், மீரா மிதுன் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஷால் தன்னை திருமணம் செய்துகொள்ள 2, 3 வருடங்களாக கேட்டு வந்ததாகவும், தனது அம்மாவுக்கு விஷாலை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தனக்கு பெரிய பணக்கார பையன் எல்லாம் வேண்டாம் என்று விஷாலை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக ஓவர் சீன் போட்டு பேசும் இந்த ஆடியோ சமூகலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.