விஷால்-ஆர்யா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: தயாரிப்பு நிறுவனம் இதுதான்

Vishal-Arya's film with Anand Shankar to go on floors from next month? |  Tamil Movie News - Times of India

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ’அவன் இவன்’ என்ற திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படம் மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.