விஷாலின் ‘சக்ரா’ பட 2-வது ஸ்னீக் பீக் இன்று ரிலீஸ் !

Image result for vishal sakra movie

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸான படம் சக்ரா. இப்படத்தின் 2 வது ஸ்னீக்பீக் இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் சக்ரா,இப்படத்தை எம்.எச் ஆனந்தன் இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த பிப்ரவரி 19 ஆம் திகதி ரிலீஸாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகின்றது. மேலும் மாஸ்டர் படத்திற்கு அடுத்தப்படியா விஷாலின் சக்ரா வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும், இப்படத்துடன் வேறு எந்தப்படமும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிமன்றத் தடை போன்ற பல்வேறு பிரச்சனைகளைத்தாண்டி இப்படம் இன்று வெற்றிபெற்றுள்ளதால் இப்படக்குழுவினர் மற்றும் விஷால் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் முதல் ஸ்னீக்பீக் ஏற்கனவே ரிலீஸாகி சாதனை படைத்த நிலையில் இப்படத்தின் 2வது ஸ்னீக் பீக் இன்று வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இது ரிலீசாகவுள்ளது.