விழாக்காலத்தை டார்கெட் செய்து வரும் oneplus nord! – சிறப்பம்சங்கள் என்ன?

oneplus Nord price: OnePlus Nord launched with 6 cameras at Rs 24,999, to  be available on August 4 - The Economic Times

இந்தியாவில் 5ஜி வசதி கொண்ட மொபைல்கள் விற்பனையாக தொடங்கியுள்ள நிலையில் ஒன் ப்ளஸ் நிறுவனம் நோர்ட் வழியாக தனது 5ஜி மொபைல் விற்பனையை தொடங்க உள்ளது.

இந்தியாவில் நவம்பர் மாதம் முதலாக விழாக்காலம் தொடங்குவதால் செல்போன் நிறுவனங்கள் பண்டிகை காலங்களை டார்கெட் செய்து புதிய மாடல் போன்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன் ப்ளஸ் நிறுவனம் தனது நோர்ட் மாடல் ஸ்மார்போனை டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

நோர்ட் மாடல் மொபைல் 6 ஜிபி ரேம் வசதியுடன், 128 ஜிபி போன் மெமரி கொண்டது. 512 ஜிபி வரை மெமரி கார்டுகளை விரிவுப்படுத்திக் கொள்ளலாம். ஸ்னாப்ட்ராகன் 690 அப்டேட்டட் வெர்சனுடன் ஆக்டா கோர் பிராசஸரை கொண்டுள்ளது.

6.49 இன்ச் டிஸ்ப்ளே எளிதில் உடையாத கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன், 4300 எம்ஏஹெச் பேட்டரி கொள்ளளவையும் கொண்டுள்ளது. முன்பக்க கேமரா 16 எம்.பியும், பின்பக்கத்தில் 64 எம்.பி, 8 எம்.பி மற்றும் 2 எம்.பிக்களில் இரண்டு கேமராக்கள் என மொத்தம் நான்கு கேமராக்களும் உள்ளன.

இது 5ஜி சப்போர்ட்டட் டிவைஸ் என்றாலும் 4ஜியுலும் இயங்கக்கூடியது. இதன் விலை ரூ.28,000 இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இந்த மடால் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.