வில்லன் மாதிரி இருந்த மனுஷன் ஹீரோ ஆகிட்டாரே – சுரேஷை கண்டு வியந்த கமல்!

Suresh Chakravarthy Wiki, Age, Wife, Family, Biography & Facts

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க பல ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அதிலும் வார இறுதியில் சுரேஷ் சக்கரவர்த்தி அனைவரது மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்துவிட்டார். அவரை ஆதரிப்போர் கூட்டம் ஒரே நாளில் அதிகரித்துவிட்டது.

வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை விட சுரேஷ் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று மாறுபட்டே தெரிகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கேப்ரில்லாவிற்கு ஆதரவாக சுரேஷ் அவரை முதுகில் தூக்கிக்கொண்டு வலி தாங்கியது பலரது கவனத்தை பெற்றது.

இந்நிலையில் தற்போது வார இறுதி நாளில் வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல் இது குறித்து தான் பேசுகிறார். மாஸ்க்கை கழட்டி விட்டு, உள்ளேயும் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது. பார்க்க வில்லனின் அடியாள் போன்று இருந்தாலும் உண்மை முகத்தை பார்த்ததும் நல்லவர் போன்று தெரிகிறது. ஹீரோவாகவே ஆகிடுவார் போல… என கூறி போட்டியாளர்களை வெளுத்து வாங்க கிளம்பிவிட்டார் கமல்.