விரைவுபடுத்தப்படும் சிறுவர் துஸ்பிரயோக வழக்குகள்.

Child Abuse Awareness for the EMS Provider | EMS World

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணைகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களில் 12 ஆயிரத்து 968 சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முடிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் என சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மேலும் 851 வழக்குகளின் விசாரணைகள் மாத்திரமே நிலுவையில் உள்ளதாகவும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.