விரைவில் தன்னார்வப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் – இமானுவல் மக்ரோன்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் பிரான்ஸின் தன்னார்வப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி வழங்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில், வனவிலங்கு பூங்காவில் அரசு சாரா அமைப்பானACTED மற்றும் அவர்களது உள்ளூர் வழிகாட்டி மற்றும் வாகன ஓட்டுநர், ஆறு பிரான்ஸ் உதவித் தொழிலாளர்கள் என 8 பேர் இனந்தெரியாத தாக்குதல்தாரிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கண்டித்துள்ளார். இதுகுறித்து எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தன்னார்வப் பணியாளர்கள் மீதான படுகொலையானது பிரான்ஸின் மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இது மிகவும் கோழைத்தனமானது. இதற்கான பதில் விரைவில் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் கூட்டப்படும் பாதுகாப்புச் சபையானது, உடனடியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டப்பட உள்ளது.