வியன்னா துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய 14 பேர் இதுவரை கைது

வியன்னாவில் கடந்த திங்கட்கிழமை துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரைக் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து ஒஸ்திரியா பொலிஸார் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு 14 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 வயது இஸ்லாமிய பயங்கரவாதி என்று தெரிவிக்கப்பட்ட அந்த நபர், வழிப்போக்கர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பொலிஸாரால் குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஒஸ்திரிய தலைநகரில் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி ஏந்தியவர் தனியாக செயல்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

இறந்த நான்கு பேரில் ஒரு வயதான பெண், ஒரு முதியவர், ஒரு இளைஞன் மற்றும் ஒரு பணியாளர் என்று ஒஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் கூறினார்.மேலும் இந்த சம்பவத்தில் 22 பேர் காயமடைந்தனர் என்றும் இறந்த பெண்களில் ஒருவர் ஜேர்மனியை சேர்ந்தவர் என்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.