விமான போக்குவரத்துக்கு நிறுவனங்களுக்கு கனேடிய மத்திய அரசின் உதவி

கனடிய அரசாங்கம் covid -19 இனால் மிகவும் பாதிக்கப்பட்ட விமான போக்குவரத்து துறைக்கு உதவ முன்வந்துள்ளது. புதிய உதவி திட்டத்தின்படி covid 19 காரணமாக தமது பயணங்களை ரத்து செய்த பயணிகளுக்கு பணத்தைத் திருப்பி கொடுக்கும் விமான நிறுவனங்களுக்கு கனேடிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. விமான போக்குவரத்து துறை covid -19 காரணமாக பலவழிகளிலும் பாதிக்கப்பட்ட தமக்கு சலுகைகள் வழங்குமாறு நீண்டகாலமாக மத்திய அரசாங்கத்தை கோரிய வண்ணம் இருந்தனர். நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் Marc Garneau விமான துறை நிறுவனங்களின் இந்த கோரிக்கைக்கு தமது அரசாங்கம் செவிமடுப்பதாகவும் இந்த வார இறுதியில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார். கனடாவின் வணிக விமான நிறுவனங்கள் COVID-19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் Covid -19 நோய் பரவும் என்ற அச்சம் காரணமாக 90 வீதமான விமான பயணங்கள் 90 வீதத்தினால் குறைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.