விமர்சனம் செய்தவர்களை விளாசி தள்ளிய ஷிவானி நாராயணன்!

Oviya goes off air; Harshala Honey and Surendar Shanmugam thank fans for  the love - Times of India

தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும், இந்த புகைப்படங்களுக்கு ஒரு சில ரசிகர்கள் ஆதரவு தந்தாலும் பலர் அவரது புகைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

மேலும் பல இணையதளங்கள் ஷிவானியின் புகைப்படங்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் கூடிய செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை ஷிவானி பதிவு செய்துள்ளார்
நான் எந்த உடை அணிவது, எப்படி இருப்பது என்பது என்னுடைய சுதந்திரம். எனக்கு எனது பெற்றோர்கள் முழு சுதந்திரம் கொடுத்து உள்ளனர். மேலும் அவர்கள் என்னை நன்றாக வளர்த்துள்ளனர். எனவே என்னை விமர்சனம் செய்து வெறுப்பேற்றலாம் என்று எண்ணினால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள்பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக யூடியூபில் என்னைப்பற்றி மூன்றாம்தர விமர்சனம் செய்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான் என்று ஷிவானி நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.