விபிஎஃப் கட்டண பிரச்னை தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததை அடுத்து, இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.