விபத்தில் காயமடைந்தவர் இளைஞர் மரணம்.

Bahrain: Expat Dies in Road Accident

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று (18) மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்  மடுவிலிருந்து, மல்லாவி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.

விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.  எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தாணுயன் வயது 19 என்ற இளைஞரே சாவடைந்துள்ளதுடன், மற்றய நபர் சிறு காயங்களிற்கு உள்ளாகினார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்