விபத்தில் இளைஞர் பலி!

வவுனியாவில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… 


புளியங்குளம் முல்லைத்தீவு பிரதானவீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்து மின்சாரதூணுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த நெடுங்கேணி கரடிப்புலவு பகுதியைசேர்ந்த  தயாபரன் வயது 31 என்ற இளைஞர்  சாவடைந்துள்ளதுடன், மற்றய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

#srilanka_news