விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்து மத பெண்கள் குறித்த பேசிய சர்ச்சைகுரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

திருமாவளவன் பேசிய கருத்து தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளரான அஸ்வத்தாமன் என்பவர் தொல். திருமாவளவன் இந்து மத பெண்களை கொச்சைபடுத்தும் வகையிலும்,இந்து சாஸ்திரங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பரப்பி வருவதால் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதே போல் ஆவடி,கோடம்பாக்கம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களிலும் திருமாவளவன் மீது புகார் அளித்து உள்ளனர்.

இப்புகாரின் அடிப்படையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதாவது கலகம் செய்வதற்கு தூண்டிவிடுதல்,பேச்சால் சாதி மத உணர்வுகளை தூண்டிவிட முயற்சித்தல்,இருமதத்தினரிடையே கலவரத்தை உருவாக்குதல்,உள்நோக்கத்துடன் மத உணர்வுகளை காயப்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.