விஜேதாச ராஜபக்சவின் மகன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வெலிகடை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 பேரை காயமடைய செய்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக
பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெலிகடை பொலிஸாரால்அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.