விஜய் படத்துக்காக பல கோடி சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட முருகதாஸ் – இன்று பூஜை!

நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி - Newsfirst

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்த நிலையில் அதில் பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போகவே அதில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் திரைக்கதை பணிகளை முடித்து படப்பிடிப்பு தொடங்க இந்த ஆண்டு இறுதி ஆகிவிடும் என்பதால் அதற்குள் ஒரு படத்தை நடித்து முடிக்க ஆர்வமாக இருக்கிறார் விஜய். இந்நிலையில் தனக்கு துப்பாக்கி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்த முருகதாஸ் துப்பாக்கி 2 திரைக்கதையோடு வர அவருக்கு ஓகே சொல்லியுள்ளார். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் பட்ஜெட்டை பெருமளவு குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வற்புறுத்தவே இழுபறியான சூழல் உருவானது.

இந்நிலையில் இப்போது அவர்கள் சொன்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்க முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தர்பார் படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அவர், இப்போது இந்த படத்துக்கு பாதிக்கு மேல் சம்பளத்தைக் குறைத்து கொண்டுள்ளாராம். சன் பிக்சர்ஸ் விஜய்யின் சம்பளம் 70 கோடி போக 60 கோடியை முருகதாஸிடம் கொடுத்து பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தர சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.