விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை; 5 பேர் கைது

எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி || Vijay  Sethupathi fulfilled dream future space star

புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ரசிகர் மன்ற தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் மணிகண்டனுக்கும், மன்ற நிர்வாகியாக உள்ள ஆட்டுப்பட்டியை சேர்ந்த ராஜசேகருக்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நெல்லித்தோப்பு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்த ராஜசேகர் மற்றும் அவரது ஆட்கள் மணிகண்டனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை - ரசிகர் மன்ற  பிரச்னை கொலையில் முடிந்தது எப்படி? | vijay sethupathi fans assosiation  leader murder in ...

இதுதொடர்பாக மணிகண்டனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், ரசிகர் மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக மணிகண்டனுக்கும், ராஜசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ராஜசேகர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் இணைந்து மணிகண்டனை வெட்டிக் கொன்றனர். இந்தக் குற்றத்தை அவர்கள் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதை அடுத்து மேலும் இருவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.