விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!

Is this Vijay Sethupathi's look in Thalapathy Vijay's Master? - Tamil News  - IndiaGlitz.com

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்த விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் குவிந்தது என்பதும், அதன்பின்னர் அவர் ‘நன்றி வணக்கம்’ என்று கூறி அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 800 பட விவகாரத்தின்போது ஒரு சில நெட்டிசன்கள் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுத்தனர். இதற்கு கடுமையான கண்டனங்களை கனிமொழி எம்பி உள்பட பலர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 153, 294பி, மற்றும் 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.