விஜய் சேதுபதி எடுக்கும் முடிவுக்கு நானும் காத்திருக்கிறேன் – பிரபல இயக்குநர் டுவீட்

Laabam trailer: Vijay Sethupathi is a revolutionary-in-the-making in this  intriguing film | Daily 2 Daily News

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி எடுக்கும் முடிவுக்கு நானும் காத்திருப்பதாக இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி, எந்த ஒரு நிர்பந்தமும் அரசியல் வினாக்களை பற்றி கவலை இன்றி ஜனநாயகப் பூர்வமாக சிந்தித்து மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என உணர்ந்து விஜய் சேதுபதி எடுக்கும் முடிவுக்கு நானும் காத்திருக்கிறேன்.