விஜய் சேதுபதியின் முத்தையா முரளிதரன் படம்! – மோஷன் போஸ்டர் அப்டேட்

Muttiah Muralitharan biopic: Tamil actor Vijay Sethupathi to play lead in  800 - NewsWire

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்து உருவாகும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் மிகசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். தமிழரான இவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து விஜய் சேதுபதி ”முரளிதரன் 800” என்ற படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நாளை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நாளை 6 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.