விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய திருமலை – இயக்குனர் ரமணா நன்றி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திருமலை படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக இருந்த விஜய்யை முழு நீள ஆக்‌ஷன் படங்களின் கதாநாயகனாக மாற்றியது திருமலை படம். புதுமுக இயக்குனரான ரமணா இயக்கிய இந்த படத்தை கே. பாலச்சந்தரி கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. ஜோதிகா, கௌசல்யா மற்றும் ரகுவரன் நடித்த இந்த படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதைக் குறிப்பிடும் விதமாக அந்த படத்தின் இயக்குனர் ரமணா ‘17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் எங்கள் திருமலை திரையைத் தொட்டது…என் வாழ்வுக்கான விதையை திரைத்துரை நட்டது. உடனிருந்த அத்தனை கலைஞர்களுக்கும், எங்களை உயர்த்திய ஒவ்வொரு ரசிகர்கருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.’ என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.