விஜய்யின் பெஸ்ட் வில்லன் இவர்தான் – ஆனால் 11 ஆண்டுகளாக சேரவில்லை!

Tamil Cine Talk – நடிகர் பிரகாஷ் ராஜ்

விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த கில்லி முத்துபாண்டி என்ற வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ்.

கில்லி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிரகாஷ் ராஜின் அபாரமான நடிப்பும் ஒரு காரணம். அந்த அளவுக்கு மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்போது வரை அவர் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் அந்த படத்தில் பயன்படுத்திய செல்லம் என்ற வார்த்தையை சொல்லிவிட்டுதான் பேசுவார்.

அதே போல சிவகாசி, போக்கிரி மற்றும் வில்லு ஆகிய விஜய் படங்களிலும் அவர் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் வில்லு படத்துக்குப் பின் அவர் விஜய் படங்களில் நடிக்கவில்லை. இதற்கு காரணம் வில்லு படத்தின் போது விஜய்க்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என சொல்லப்படுகிறது.