விஜய்க்கு கூட தெரிவிக்காத வாழ்த்தை ஒரு நடிகைக்கு தெரிவித்த சங்கீதா!

தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் இதுவரை விஜய் நடித்த படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாவிற்கு மட்டுமே வருகை தருவார் என்பதும், அவ்வாறு வருகை தந்தாலும் அவர் அந்த படம் குறித்து எதுவும் பேச மாட்டார் என்பதும் குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து கூட தெரிவித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதல்முறையாக நடிகை வரலட்சுமிக்கு சங்கீதா விஜய் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். நடிகை வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளிவந்ததை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. திமுக எம்பி கனிமொழி கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தளபதி விஜயின் மனைவி சங்கீதாவும் வரலட்சுமிக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இந்த வாழ்த்துக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.