விஜயலட்சுமி தொண்டமான் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜயலட்சுமி தொண்டமான் போட்டியிடவுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று  நிராகரித்துள்ளது.


இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அதற்கு மறுப்புத் தெரிவித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.