விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? நலம் விசாரித்த விஷால்!

விஜயகாந்தின் உடல்நலம் விசாரித்த விஷால் || Vishal inquired about Vijaykanth  health

நடிகர் விஷால் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 எனவே, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷை ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.