விசேட அதிரடிப்படையினரால் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இயங்கராவூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலையடுத்து  இன்று அதிகாலை  03 மணியளவில் அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் முதிரைக்கடத்தலை முறியடித்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 07முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  அவற்றை கடத்திச்செல்லப் பயன்படுத்தப்பட்ட  கப் ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகள் வாகனமும் வவுனியா பூவரசங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.