விக்கியின் கருத்தை நீக்க கோரிக்கை

நாட்டை பிளவுபடுத்துவதை ஊக்குவிக்கும் விதமான கருத்தை விக்னேஸ்வரன் எம்பி வெளியிட்டார் என குற்றம்சாட்டியுள்ளதுடன் அவரது உரையின் ஒரு பகுதியை நாடாளுமன்ற ஹன்சட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி மனுச நாணயக்கார இன்று (21) சபாநாயகரை கோரியுள்ளார்.


தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்று நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.


அத்துடன் முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதை சிங்களத்தில் கல கல டே பல பல வே என்றும் குறிப்பிட்டிருந்தார்.