வாக்களிப்பது கடமை! அளிக்காவிடில் மடைமை – வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்

வாக்களிப்பது அனைவரதும் கடமை வேண்டாம் என்று வாக்களிக்காதிருப்பது மடைமை என்று வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது.

ஆள்பவனை தீர்மானிக்கவேண்டியது ஆளப்படுபவனே. அவ்வாறு தீர்மானிப்பதற்கு உள்ள ஒரே ஒரு வாய்ப்பு தேர்தலே. அந்த தேர்தலில் உங்களிடம் உள்ள ஐனநாயக ஆயுதம் வாக்கே. அந்த ஆயுதத்தைபயன்படுத்தி உங்களை ஆளப்போகின்றவர்களை நீங்கள் தெரிவுசெய்வதற்காக வாக்களிக்கும் நிலையத்திற்கு செல்லாவிட்டால் அதன்’ கருத்து உங்களை ஆளப்போகின்றவர்களை நீங்கள் அல்லாது வேறு ஒருவர் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கப்போகின்றீர்கள் என்பதாகும். அதாவது உங்கள்  உரிமையை நீங்களே மறுக்கின்றீர்கள் என்பதேயாகும். ஆகவே வாக்களிப்பு நிலையத்திற்கு கட்டாயம்சென்று வாக்கினை செலுத்துமாறு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.