வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நெளுக்குளம் பகுதியிலிருந்து நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம்  பகுதியில் சென்றுகொண்டிருந்த வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முன்பாக சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  இருவரும் காயமடைந்துள்ளனர். 
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம்  போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.