வவுனியா விபத்தில் இருவர் பலி!!

வவுனியா கொறவப்பொத்தானை வீதி ஆறாம்கட்டை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.


குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் வவுனியாவில் இருந்து கெப்பிட்டிகொல்லாவை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் குறித்த நபர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில்  வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஒரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


கெப்பிற்றிகொல்லாவை பகுதியை சேர்ந்த இருவரே சாவடைந்துள்ளதுடன் அவர்களது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பாக மடுகந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.