வவுனியா வலிந்து காணாமலாக்கபட்டோர் உறவுகள் ஆர்ப்பாட்டம்

எமக்கான நீதியை நாம் பெறுவதற்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்து என கோரி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 வவுனியா பழைய பஸ்நிலையத்திற்கு முன்பாக காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.தொடர்ந்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 


சர்வதேச அழுத்தம் இலங்கைக்கு வேண்டும், குற்றம் செய்தவர்களிடமே நாம் நீதியினை எதிர்பார்க்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளிநாடுகளில் முகவரி தெரியாமல் இருக்கிறார்கள் என்று அண்மையில் ஹெகலிய ரம்புகொல தெரிவித்திருந்தார். ஆகவே அவருக்கு தெரிந்திருந்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள், என்றும் ஜனநாயக ரீதியான எமது போராட்டங்களுக்கு அரசினால் பல்வேறு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவதால் போராட்டத்தைக் கூட எம்மால் சுதந்திரமாக முன்னெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே,தமிழ்க்குழந்தைகளும் பயங்கரவாதிகளா,பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.