வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம்

வவுனியா  வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது.


இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், கே.கே.மஸ்தான், வவுனியா வடக்கு  பிரதேச செயலாளர் இ.பிரதாபன், உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, வவுனியா வடக்கு பிரதேசசபையின் தலைவர் தணிகாசலம், பிரதேசசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.  
இதன் போது வன வள திணைக்களம் தொடர்பான பிரச்சனைகள், யானை வேலி இன்மை தொடர்பான பிரச்சனைகள் வீட்டுத்திட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.