வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்ததலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன் செல்வம் அடைக்கலநாதன் வினோநோகராதலிங்கம் கே.கே.மஸ்தான் பிரதமசெயலாளர் அ.பத்திநாதன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பிரதேச செயலர்கள் திணைக்கள தலைவர்கள் பொலிசார் என பலரும் கலந்துகொண்டனர்.    

கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தீர்க்கப்படாத முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் ஓமந்தை அரச குடியிருப்பாளர் வீட்டுத்திட்டம், நீர் வழங்கல் வேலைத்திட்டம் வவுனியா நகர நவீனமயமாக்கல் புதிய பேரூந்து நிலையத்தில் இணைந்த நேர அட்டவணையில் சேவையினை ஆரம்பிப்பது இராணுவத்தினரின் வசமுள்ள வட மாகாண கூட்டுறவு பாடசாலையை மீளப்பெறுவதற்கான ஏற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

 வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்!!  
வவுனியா மாவட்ட ஒருங்கிணைைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்ததலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மற்றும் குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது ஆரம்பமாகி  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
இன்றைய அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன்,செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கே.கே.மஸ்தான், பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன், மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதேசசெயலர்கள்,திணைக்கள தலைவர்கள், பொலிசார் என பலரும் கலந்துகொண்டனர்.    

இன்றைய கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தீர்க்கப்படாத முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.