வவுனியா மாவட்டசெயலகத்தில் கலந்துரையாடல்

நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று  வவுனியா மாவட்டசெயலக கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்டசெயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால்சில்வா,வடமாகண பிரதிதேர்தல் ஆணையாளர் லலித்ஆனந்த, ஏற்றுமதி அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடமாகண பிரதிதேர்தல் ஆணையாளர் லலித்ஆனந்த இம்முறை தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்துவருவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் வாக்குபெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டுவரப்படும் போது கட்சிகளின் முகவர்கள் அந்தவாகனங்களில் பயணிக்கமுடியும் என்று தெரிவித்ததுடன்,வாக்கெண்ணும் நடைமுறைகள் மற்றும்ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் வேட்பாளர்களிற்கு தெளவூட்டியிருந்தார்