வவுனியா மரக்கறி மொத்த வியாபரம் மூடப்பட்டது

வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று மூடப்பட்டுள்ளது. 

வவுனியா மாவட்ட செயலாளர் சமன் மந்துலசேனவின் வேண்டுகோளுக்கு அமையவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
குறிப்பாக இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலும் 12 பேர் வரை கொரோனோ தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டிருந்தனர். 
இதனையடுத்து அதிகளவான மக்கள் செல்கின்ற இடமான வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையம் முழுமையாக மூடப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.