வவுனியா மத்தியஸ்த சபை பிற்போடப்பட்டது

கொரனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காணப்பட்டு வரும் நிலையில் மத்தியஸ்தசபை செயற்பாடுகளை பிற்போட்டுள்ளதாக வவுனியா மத்தியஸ்தசபையின் தலைவர் சி. வரதராஜா தெரிவித்தார்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்று வரும் மத்தியஸ்தசபையின் செயற்பாடுகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சமூகத்தில் இயல்புநிலை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.