வவுனியா பொலிஸாரினால் கொவிட்19 விழிப்புணர்வு சுவரொட்டிகள்

வவுனியா பொலிஸாரின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் கொரனா விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நின்ற தனியார் மற்றும் அரச பேருந்துகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
அத்தோடு புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் என்பவற்றிலும் தொற்று நீக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இச்செயற்பாட்டில் வவுனியா சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன், சுகாதார கல்வி அதிகாரி கேதிஸ்வரன் ஆகியோர் இணைந்து கொண்டிருந்தனர்.